ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு!

 
ஜேஇஇ

 ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ

2025-26ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 28-ல் தொடங்கி நவம்பர் 22ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகளுக்கான விரிவான கால அட்டவணையை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பிஇ, பிடெக் படிப்புக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 22, 23, 24 மற்றும் 28, 29ம் தேதிகளில் காலை, மாலை என இருவேளைகளாக நடத்தப்படும். அதேபோல், பிஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2ம் தாள் தேர்வு ஜனவரி 30ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

ஜேஇஇ

இதன் விவரங்களை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். மேலும், 011-40759000 / 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் விவரங்கள் பெறலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதி வெளியிடப்படும்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web