இன்று பம்பை வந்தடையும் ஆபரண பெட்டி... தங்க அங்கி அணிவித்து நாளை சபரிமலையில் மண்டலபூஜை!

 
சபரிமலை
சபரிமலை ஐயப்பனுக்கு நாளை டிசம்பர் 26ம் தேதி தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நிறைவு பெற உள்ள நிலையில், இதற்கான தங்க அங்கி ரதம் ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பி கொண்டு வரப்படுகிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாட்டுடன் இன்று டிசம்பர் 25ம் தேதி பம்பைக்கு திருஆபரண பெட்டியை சுமந்து ரதம் வந்தடைகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் மண்டல காலத்துக்கான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சபரிமலை

விழாவின் சிகர நிகழ்வாக நாளை டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. நாளை ஐயப்பனுக்கு 420பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெறும்.இதற்கான தங்கஅங்கி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலிலின் காப்பறையில் இருந்து கடந்த டிசம்பர் 22ம் தேதி கிளம்பியது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இன்று டிசம்பர் 25-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ரதம் பம்பையை வந்தடையும்.  அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக ஆபரணப் பெட்டி சந்திதானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

சரம்குத்தி எனும் இடத்தில் மாலை 5.15 மணிக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் தங்க அங்கி ஆபரணப் பெட்டியை வரவேற்கின்றனர்.பின்னர் 18ம் படி வழியே ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்படும். அங்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு, சபரிமலை, மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகள் அருண்குமார் நம்பூதரி, வாசுதேவன்நம்பூதரி உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

சபரிமலை

தீபாராதனை வழிபாட்டுக்குப் பிறகு மாலை 6.30மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோலத்தில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பு இரவில் தங்க அணி காப்பறையில் பாதுகாக்கப்பட்டு நாளை டிசம்பர் 26ம் தேதி மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். நாளையுடன் மண்டல பூஜை நிறைவு பெறுவதால் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தங்க அங்கி புறப்பாடு மூலம் மண்டல பூஜை நிறைவு பகுதிக்கு எட்டியுள்ளது. நாளை மண்டல பூஜை என்பதால் பக்தர்கள் ஆரவாரத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web