ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண்குழந்தை... !
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான வழக்கு கடந்த சில மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் குடும்ப நல நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. ஜாய் கிரிஸில்டா, 2023 ஆம் ஆண்டு ரங்கராஜ் தன்னுடன் கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், திருமண வாழ்க்கையில் துன்புறுத்தியதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும், அவர் தன்னை கர்ப்பமாக்கி, பலமுறை வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், “மாதம்பட்டி ரங்கராஜ் என் குழந்தையின் தந்தை” எனக் கூறி, குழந்தை பராமரிப்பு, மருத்துவச் செலவு மற்றும் வாடகை செலவுகளுக்காக மாதம் ரூ.6.5 லட்சம் வழங்க உத்தரவிட நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸில்டா மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த வாரம் இருவரும் ஆஜராகிய விசாரணை பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தை பிறந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் பல சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பிரபலமானவர். அவருக்கு முன்பு ஸ்ருதி என்ற பெண்மணியுடன் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதே நிலையில் இரண்டாவது திருமணம் குறித்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதமாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
