ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி... இன்று 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியுடன் இந்தியா பலப்பரீட்சை!
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கிப் போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி மற்றும் முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோத உள்ளன.
அரையிறுதிப் போட்டிகள் விவரம்:
இன்று நடைபெற உள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா நடப்பு சாம்பியனான ஜெர்மனியை எதிர்த்து விளையாடுகிறது. இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தியா: ரோகித் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. கால் இறுதியில் பெனால்டி ஷூட்டில் பெல்ஜியத்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா 2 முறை (2001, 2016) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜெர்மனி: 7 முறை சாம்பியனான ஜெர்மனி, லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளைத் தோற்கடித்தது. கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் வெளியேற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்த இரண்டு பலமான அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழையத் தங்களது முழு பலத்துடன் மல்லுக்கட்டும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவு இருக்காது.
மற்ற போட்டிகள்: முதல் அரையிறுதி: ஸ்பெயின் - அர்ஜென்டினா (இன்று மாலை 5.30 மணி) 5 முதல் 8-வது இடங்களுக்கான ஆட்டங்கள், 9 முதல் 16-வது இடங்களுக்கான ஆட்டங்கள் மற்றும் 17 முதல் 24-வது இடங்களுக்கான ஆட்டங்களும் இன்று நடைபெறுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
