#JUST IN: IPL SCHEDULE முழு அட்டவணை வெளியானது... முதல் போட்டியில் யார் யார் மோதுகிறார்கள் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கின் அடுத்த சீசனின் அட்டவணை இன்று பிப்ரவரி 16ம் தேதி மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2025 அட்டவணைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்தக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 10 அணிகள் மீண்டும் பட்டத்திற்காக களமிறங்க உள்ளன. அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் நேரடி ஒளிபரப்பை ஸ்ட்ரீமிங் JioHotstar செயலியில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IPL2025 schedule. Starts on 22nd March and ends on 25th May, 2025. pic.twitter.com/4Cnpn4vA9X
— Karishma Singh (@karishmasingh22) February 16, 2025
ஐபிஎல் 2025 ல் மீண்டும் பத்து அணிகளுக்கு இடையே ஒரு பட்டப் போட்டி நடக்கப் போகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை அடங்கும்.
2025 ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இந்த சீசனின் முதல் போட்டி மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களுரூ அணிகளுக்கு இடையே தொடக்கப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2008 ல் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 17 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளன. இந்த இந்திய டி-20 லீக்கின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.
இரு அணிகளும் இதுவரை 5 முறை பட்டத்தை வென்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!