கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய கமல்!!

 
கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!


தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பி வந்தார். அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சிகிச்சைக்காக சென்னை போருரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!


அவர் விரைவில் குணமடைய தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உட்பட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!


கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பே கொரோனாவிலிருந்து விடுபட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. எனினும் சில நாட்களுக்குத் தனிமையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை டிசம்பர் 4 ம் தேதி கமல்ஹாசன் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

From around the web