தமிழக மக்களுக்காக மக்களவையில் தொடா்ந்து போராடுவேன்... கனிமொழி எம்.பி.,!
தமிழக மக்களின் உரிமைகளுக்காக மக்களவையில் தொடா்ந்து நான் போராடுவேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ லெட்சுமிபுரம், சதுக்கை தெரு, சங்கம் அருகிலும், ஜாமி உல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசல் அருகிலும் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அவா், திறந்த வேனில் நின்றவாறு பேசிய அவர், “சகோதரத்துவம் நிறைந்த இந்திய ஒன்றியத்தை பிரிவினையாலும், பிளவுவாதத்தாலும் சீர்குலைக்க நினைப்போருக்கு மாற்றாக, ஜனநாயகத்தை நிலைநாட்டிட தி.மு.கழகம் சார்பில் தூத்துக்குடியில் மீண்டும் களம் கண்ட என்னை அமோக வெற்றிபெறச் செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி.
முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழியில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக மக்களவையில் தொடா்ந்து நான் போராடுவேன். இங்குள்ள பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளையும், அவா்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பேன். என்னிடம் சொல்லி இருக்கின்ற மக்களின் கோரிக்கைகளை நிச்சயமாக சரி செய்து கொடுப்போம் என்றாா்.
முன்னதாக அவர் திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், அமலிநகா், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!