பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன் காலமானார்... இன்று இறுதிசடங்குகள்!
பத்திரிகையாளர், எழுத்தாளர், பிரபல திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்ட எம்.ஜி.கன்னியப்பன் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், நண்பர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது சொந்த ஊரான சேலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நா.முத்துக்குமார், யுகபாரதி, சிநேகன், கபிலன், விவேகா, குகை.மா.புகழேந்தி என பல ஹிட் பாடலாசிரியர்களின் சம காலத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.கன்னியப்பன். சொந்த ஊரான சேலத்தில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு கிளம்பி வந்தவர்.
சினிமாவின் தொடர்ந்து போராடிக் கொண்டே வருமானத்திற்காக பதிப்பங்கள், பத்திரிகைகளில் சில காலம் பணி புரிந்தார். தொடர்ந்து கதை, கவிதை இயங்கி தனது இருப்பை வெளிப்படுத்தி வந்தவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.
திரைப்படங்களில் பாடலாசிரியராக பரவலாக அறியப்பட்ட எம்.ஜி.கன்னியப்பன் பல சீரியல்களுக்கு வசனங்களை எழுதியிருக்கிறார். திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். எழுத்தைத் தாண்டி பழகுவதற்கு ரொம்பவே இனிமையான இவரின் நட்பு வட்டம் பெரியது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!