தீராத நோய்கள் தீர்க்கும் சூப்பர் விரதம் !! எப்படி கடைப்பிடிப்பது?

 
தீராத நோய்கள் தீர்க்கும் சூப்பர் விரதம் !! எப்படி கடைப்பிடிப்பது?


பொதுவாக திங்கட்கிழமை என்றாலே சிவபெருமானுக்குரிய தினம். இந்த நாளில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபடகணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் . அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டித்தால் சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம் என்பது ஐதிகம்.

சந்திரன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான் தனது குஷ்ட நோய் நீங்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அத்துடன் சிவனின் தலையில் இடம் பெறும் பாக்கியமும் பெற்றார்.

தீராத நோய்கள் தீர்க்கும் சூப்பர் விரதம் !! எப்படி கடைப்பிடிப்பது?

மேலும் பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களில் முதல் திங்கட்கிழமை முதல் கடைப்பிடிக்கலாம்.

அதிகாலையில் வீடு சுத்தம் செய்து பிள்ளையாரை வேண்டி கலசம் வைக்க வேண்டும். கலசத்தில் நாணயம், மஞ்சள் பொடிபோட்டு, மாவிலை வைத்து தேங்காய் வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்காரம் செய்ய வேண்டும்.

தீராத நோய்கள் தீர்க்கும் சூப்பர் விரதம் !! எப்படி கடைப்பிடிப்பது?

சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைக்கலாம். நாள் முழுவதும் சிவ நாமத்தை உச்சரித்தல் மிகவும் சிறப்பு. பூஜை முடிந்ததும் வீட்டில் பெரியவர்களை பார்வதி பரமேஸ்வரனாக நினைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டும். அல்லது வாழ்நாள் முழுவதுமே கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் இந்த கார்த்திகை சோமவாரத்தில் மட்டுமாவது அனுஷ்டிக்கலாம். இதனால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி தீராத நோய்களும் தீரும். ஆரோக்கிய வளமான வாழ்வை பெறலாம் என்பது நம்பிக்கை.

From around the web