கேதார கௌரி விரதம் நிறைவு... கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு!

 
கேதார கெளரி தீபாவளி

சிவபெருமானுக்குரிய முக்கிய அனுஷ்டானங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் நேற்று பக்தி நிறைந்த முறையில் நிறைவு பெற்றது. கன்னிப் பெண்கள் தகுந்த வாழ்க்கைத் துணை வேண்டியும், திருமணமான பெண்கள் குடும்ப அமைதி, கணவர் நலம் நிலைக்க வேண்டியும் சிவ-பார்வதியை சிறப்பு பூஜைகளுடன் விரதம் இருந்து வணங்கினர்.

புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி ஐப்பசி அமாவாசை வரை 21 நாட்கள் அனுசரிக்கப்படும் இந்த விரதத்தை பலர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்தாலும், சமகால சூழ்நிலைக்கேற்ப நேற்று அமாவாசை நாளில் ஒருநாள் விரதமாகவும் இருந்து வழிபாடு மேற்கொண்டனர்.

தீபாவளி கேதார கௌரி விரதம்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோவில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெரு முத்துமாரியம்மன் கோவில், பழைய சப்-ஜெயில் சாலை வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பெண்கள் அதிரசம் உள்ளிட்ட நெய்வேத்தியங்களுடன் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்தனர்.

குலசை குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அம்மன் துர்கா

பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 21 வகையான நெய்வேத்யங்கள்—அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை முதலியவைகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவபெருமான்-கௌரி அம்மன் இணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விரத நிறைவு பூஜையில் பங்கேற்றனர். இதையொட்டி கோவிலில் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள பல அம்மன் கோவில்களிலும் வீடுகளிலும் அதிரசம் சுட்டு சாமிக்கு படைத்து பெண்கள் பக்தியுடன் வழிபாடு செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?