பகீர் சிசிடிவி காட்சிகள்... கோயில் திருவிழாவில் கோர தீவிபத்து... 8 பேர் கவலைக்கிடம்... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
கேரளா
 


 

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில்   பிரசித்தி பெற்ற நீலேஸ்வரம் அஞ்சுதம்புலம் வீரர்காவு கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற  திருவிழாவில் நேற்று அக்டோபர் 28ம் தேதி  நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில்  திருவிழாவை கண்டுகளிக்க அங்கு திரண்டிருந்த பெரும்பாலானோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து  அங்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர்களுள் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  திருவிழாவுக்காக பட்டாசு வெடிக்க அங்குள்ள ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றியதே  இந்த கோர விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளம்

அதில் ரூ. 30,000 மதிப்புள்ள பட்டாசுகள் தீயில் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் வெடிக்க அவற்றை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுவரை மொத்தம் 154 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது 97 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web