தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள்... 2 பேர் கைது!

 
மருத்துவக் கழிவுகள்

கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சமீபத்தில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் கொடகநல்லூர் மற்றும் நடுகல்லூர் பகுதிகளில் கொட்டப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளை கொட்ட பணம் வாங்கிய சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது

விசாரணையில், குப்பை கொட்டிய வழக்கில், தலைமை ஏஜென்டாக மனோகர் செயல்பட்டது தெரியவந்துள்ளதாக, மாவட்ட எஸ்.பி., தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web