குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

 
குகேஷ் மனுபாக்கர்

 மத்திய அரசின் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கும் உயரிய விருதான கேல்  ரத்னா விருது மனு பாக்கர், குகேஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் உலக செஸ் சாம்பியன் டி குகேஷ் ஆகியோர் கேல் ரத்னா விருதை ஜனவரி 17 அன்று பெற இருக்கின்றனர். 

நாட்டின் உயரிய விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலில் மனு பாக்கரின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனு பாக்கர், குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகிய நான்கு பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும்.

குகேஷ் மனுபாக்கர்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2024 தேசிய விளையாட்டு விருதுகளை இன்று அறிவித்தது. வரும் ஜனவரி 17ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் விருது பெற்றவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து கேல் ரத்னா விருதுகளைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web