’16 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்’.. 24 வயது பெண் போக்சோவில் கைது!

 
சிறுவன், சிறுமி, இளம்பெண், இளைஞர், ஆண்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 16 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். 24 வயதான வினோதினி அவனது வீட்டிற்கு அருகில் வசிக்கிறார்.வினோதினுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில், வினோதினிக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது பக்கத்து வீட்டுக்காரரான சிறுவன் மீது காதல் ஏற்பட்டது.

பின்னர், வினோதினி சிறுவனுக்கு காதலை வெளிப்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் அவனை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். சிறுவன் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பெரியபாளையம் போலீசார், சிறுவனின் பக்கத்து வீட்டு பெண் ஆசை வார்த்தைக் கூறி வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றது தெரியவந்தது.

போக்சோ

இதைத் தொடர்ந்து, போலீசார் பெண்ணை தேடி,  கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும், சிறுவனை  வினோதினியிடம் இருந்து மீட்டனர். விசாரணையில், வினோதினி தன்னை வேறு ஊருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். இதையடுத்து, போலீசார் வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web