சிறுமியை கடத்தி பலாத்காரம்.. கொடூரமாக கொன்று ஆட்டோவில் ஏற்றி சென்ற பயங்கரம்.. பகீர் பின்னணி!

 
விஷால் காவ்லி

மும்பை அருகே உள்ள கல்யாண் நகரில் வசிக்கும் 13 வயது சிறுமி திங்கள்கிழமை மாலை தனது தாயிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கடையில் உணவு வாங்கச் சென்றுள்ளார். அவள் சென்ற பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் பல இடங்களில் தேடினார். சிறுமி காணவில்லை. இதையடுத்து, வேலைக்குச் சென்ற கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவரும் வந்து அவளைத் தேடி, இரவில் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், சிறுமியின் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாரோ ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். எனவே, அவர் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில், அவருக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷால் காவ்லி மீதும் 3 பாலியல் வழக்குகள் உள்ளன. இதில் மைனர் பெண்ணும் அடக்கம். விஷால் காவ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். மைனர் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு விஷால் காவ்லி காணாமல் போனார். இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமியைக் கொன்று, உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று பிவாண்டி அருகே வீசியது விஷால் காவ்லி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கொலைகாரன் விஷால் சிறுமியை கொன்றுவிட்டு தப்பியோடினான். அடையாளத்தை மாற்றுவதற்காக தாடியை மொட்டையடித்துவிட்டு அங்குள்ள சலூனில் இருந்து வெளியே வந்த அவரை கைது செய்தோம். மைனர் பெண்ணை விஷால் தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவாளோ என்று அஞ்சிய அவர், வங்கியில் பணிபுரியும் தனது மனைவிக்கு போன் செய்து, உடலை டிஸ்போஸ் செய்ய உதவி செய்யாவிட்டால்,  வீட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டியுள்ளார்.  

விஷால் உடலை ஆட்டோவில் எடுத்து சென்ற போது, ​​அங்குள்ள ஒரு உணவகத்தில் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அந்த பெண் விஷால் காவ்லியின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் விஷால் கவ்லி மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விஷாலின் வீட்டிற்கு சிறுமி செல்ல விடாமல் அவரது பெற்றோர் தடுத்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணுக்கு விஷாலின் மனைவியுடன் நல்ல நட்பு இருந்தது. இதனால் அந்த பெண் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை எப்படி கடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கைது

சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளோம். இதில் ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விஷாலின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விஷாலுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முகத்தில் கருப்பு துணி அணிந்து ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web