இன்று கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

 
பயிற்சி மருத்துவர்

 இந்தியாவில் இன்று கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்குத் குறித்த  விசாரணை  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர்27ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அம்மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதே நேரத்தில் மருத்துவர்களின் பணியிடபாதுகாப்பு சார்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான பிரமாணப் பத்திரத்தையும் மேற்கு வங்க அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

பயிற்சி மருத்துவர்

அந்தபிரமாணப் பத்திரத்தை பொறுத்து, தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என பயிற்சி மருத்துவர்கள்  அறிவித்துள்ளனர்.கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் 33 வயது சஞ்சய் ராயை  காவல் துறை கைது செய்தது. இதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ  வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ்,காவல் துறை அதிகாரி அபிஜித்மண்டல் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.  இதற்கிடையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம்தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

பயிற்சி மருத்துவர்
 பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் என பல கோரிக்கைகள் மாநில அரசிடம் விடுக்கப்பட்டன. தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் நீடித்தது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள், செப்டம்பர் 21ம் தேதி முதல் பணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web