கிருஷ்ண ஜெயந்தி | இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

 
மெட்ரோ

இன்று ஆகஸ்ட் 26ம் தேதி, கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினத்தையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக இன்று முழுவதும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி

இன்று காலை 8  மணி  முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி  முதல் 8 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிட இடைவேளையிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணி முதல் - 5 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் -10 மணி வரையிலும் ஒவ்வொரு 7 நிமிட இடைவேளையிலும் இரவு 10 மணி முதல் -11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவேளையிலும் ஒரு மெட்ரோ ரயில் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ

சனி,  ஞாயிறு வார விடுமுறை மற்றும் இன்றைய விடுமுறை என தொடர்ந்து 3 தினங்கள் விடுமுறை என்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருப்பவர்களின் வசதிக்காக இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web