மாணவிகளிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்.. புகாரளித்தும் கண்டுக்காத கலெக்டர்... அமைச்சரின் காரை முற்றுகையிட்ட பெற்றோர்!
நாமக்கல் மாவட்டம், அலமேடு பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்களது மகள்களுக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமாவிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க நேரிட்டது.
இந்த சம்பவம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அரசு பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!