லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... இன்று வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று ஆகஸ்ட் 29ம் தேதி காலை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். இன்று துவங்கும் திருவிழா வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், நலனை முன்னிட்டும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மும்பை மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 7 ம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறு மார்க்கத்தில் திருவிழா முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக செப்டம்பர் 9 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. அதே போன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் நாகை வேளாகண்ணிக்கு கூடுதலாக திருவிழா நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா