பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு... இந்து மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகி மகன்கள் வெறிச்செயல்!

 
சதீஷ்குமார்

தமிழகத்தில் கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இவருக்கும் இந்து மக்கள் கட்சி முன்னாள் நிர்வாகியான எரியீட்டி வேலுவின் மகன்களுக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மகன்கள் இருவரையும் சதீஷ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எரியீட்டி வேலுவை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web