அடுத்தடுத்து அதிர்ச்சி... தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு... 15 பேர் பலி... 7 பேர் மாயம்!

 
நிலச்சரிவு

 இந்தோனேசியாவில்  சுமத்தரா தீவில் அமைந்துள்ள தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சோலோக் மாவட்டத்தில்  மலைப்பகுதியில் வசித்து வரும்  கிராம மக்கள் பலர் நேற்று மாலையில் சட்டவிரோதமாக தங்கத் தாதுவை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

நிலச்சரிவு

அப்போது கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுற்றியுள்ள மலைகளில் இருந்து சேறு சரிந்து விழுந்தது. இதனால், சுரங்கம் தோண்டியவர்கள் சேற்றில் புதைந்ததாகத் தெரிகிறது.  இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு

நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கப்பகுதியில் 25 பேர் இருந்திருக்கலாம் என அந்நாட்டு பேரிடர் மீட்பு படை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை  '15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும்,  3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது. அதே நேரத்தில் மீதமுள்ள 7 பேரின் நிலை என்ன? என்பது  குறித்து  மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது' என தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ

From around the web