பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு .... 21 பேர் பலி, பல வீடுகள் இடிந்து நாசம்!
பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி, மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் (ABC) வெளியிட்ட தகவலின்படி, எங்கா மாகாண ஆளுநர் பீட்டர் இபடாஸ், சுமார் 30 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் உறுதிப்படுத்தியதன்படி, தற்போதைய அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கை 21 ஆகும்.

கடந்த ஆண்டு மே மாதத்திலும் இதே மாகாணத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. ஆனால், பப்புவா நியூ கினியா அரசு அப்போது 2,000 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதைந்ததாக தெரிவித்திருந்தது. இந்த புதிய பேரழிவு அந்த மாகாண மக்களை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
