மேற்கு வங்கத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
மேற்கு வங்க மாநிலத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 28 பேர் பலியாகினர். டார்ஜிலிங் மற்றும் கூக் பெஹர் பகுதி வரை வெள்ளம் சூழ்ந்து இருப்பதாகவும் பல இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டும், மோசமாக சேதமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலைப்பிரதேசமாகவும், சுற்றுலா தலமாகவும் இருக்கும் மிரிக், படுமோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு பலரைக் காணவில்லை எனவும் மீட்புப் படையினர் அப்பகுதிக்குள் செல்வதற்கு முடியாமல், இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில், சனிக்கிழமை காலை 8 மணிக்கு 24 மணி நேரத்தில் 261 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மலை மாவட்டங்களான டார்ஜீலிங் மற்றும் கலிம்போங்கில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதர்கவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . டார்ஜீலிங் மாவட்டத்தையும், வடக்கு சிக்கிமை இணைக்கும் சாலைகளும், சிலிகுரி - மிரிக் டார்ஜீலிங்கை இணைக்கும் இரும்புப் பாலம் சேதமடைந்திருப்பதால், பல்வேறு பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து தனித்து விடப்பட்டிருப்பதாகவும், இப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
