ஜாமீனில் வெளியே வந்ததுமே வக்கீலுக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!
தன்னை சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்த வக்கீலையே வாக்குவாதம் ஏற்பட்டு கத்தியால் குத்தியது, தடுக்க வந்த அவரது மனைவியையும் கத்தியால் குத்தி விட்டு பிரபல ரவுடி தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சின்னதிருப்பதியைச் சேர்ந்தவர் ஆஷித் கான். வழக்கறிஞரான இவரும், இவரது மனைவி பத்மபிரியாவும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்து ஒருவர் கத்தியுடன் தப்பியோடியதைப் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ஆகிய இருவருமே ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ஜோசப் என்ற பாலாஜி என்பவர் வழக்கறிஞர் ஆஷித்கானையும், அவரது மனைவியை கத்தியால் குத்தி தாக்கியது தெரிய வந்தது. மூன்று கொலைகள் மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இந்த நபருக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்தவர் வழக்கறிஞர் ஆஷித் கான் என்பது தெரிய வந்தது.
ஜாமீனில் வெளியே வந்ததும், வழக்கறிஞரை நேரில் சந்தித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷித்கானை ஜோசப் கத்தியால் குத்தியதும், தடுக்க வந்த அவரது மனைவி பத்மபிரியாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதும் தெரிய வந்தது. தலைமறைவான ரவுடி பாலாஜியை கன்னங்குறிச்சி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!