பாலிவுட் முன்னணி நடிகர் அஸ்ரானி காலமானார்!

 
அஸ்ராணி

 

பாலிவுட் திரைப்பட உலகில் நகைச்சுவை மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகர் கோவர்தன் அஸ்ரானி (84) இன்று (அக்டோபர் 20) மறைந்தார்.

வயது மூப்பினால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றிய அஸ்ரானி, சுமார் 350 படங்களில் நடித்ததுடன், 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து 25 படங்களில் நடித்தது அவரது திரையுலகப் பயணத்தில் சிறப்பு சாதனையாகும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!