மகா கவியை நினைவு கூர்வோம்! இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! ரூ. 3,00,000 பரிசு தொகை!

 
மகா கவியை நினைவு கூர்வோம்! இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! ரூ. 3,00,000 பரிசு தொகை!

இன்று பாரதியாரின் நினைவு தினம். இந்த தினத்தை மகாகவி தினமாக அனுசரிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் பாரதி ஆர்வலர்களுக்கு மூன்று லட்சம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் என அறிவித்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காகவும், பெண் விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் சுமார் நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே உரக்க குரல் கொடுத்தவன்.

மகா கவியை நினைவு கூர்வோம்! இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! ரூ. 3,00,000 பரிசு தொகை!

முன்னுாறு ஆண்டுகள் வாழ்ந்து முடித்த அனுபவத்தை வெறும் 39 ஆண்டுக்குள்ளேயே ஆசை தீர வாழ்ந்து முடித்தவன் பாரதி. பாரதியின் நுாற்றாண்டு நினைவு தினம் செப்டம்பர் 12 ல் அனுசரிக்கப்பட உள்ளது.
1882 டிசம்பர் 11ல் எட்டயபுரத்தில் பிறந்தவர். பாரதியின் வரிகளை படிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் பாரதி இன்னும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார். பாரதியாரை வெறும் கவிஞனாக மட்டும் கொண்டாடி விட முடியாது. சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்தவர். தமிழுடன் ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என பல மொழிகளில் பேசவும், எழுதவும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

மகா கவியை நினைவு கூர்வோம்! இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! ரூ. 3,00,000 பரிசு தொகை!

அவர் வாழ்ந்த காலத்தில் பாரதி பெரிதாக கொண்டாடப்படவில்லை. அவருடைய காலத்திற்கு பிறகு அவர் பெருமையை கொண்டாடதவர்கள் இல்லை. அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி திரிந்த பாரதி, பராசக்தியிடம் சண்டை போட்ட பாரதி, மன்னர்களின் சன்மானத்தை துச்சமாக பார்த்த பாரதி, இப்படியொரு சூழ்நிலையில் சிக்குண்ட மனிதனால் எப்படி சாகாவரம் பெற்ற கவிதைகளை படைக்க முடிந்தது என்பது தான் வியப்பான உண்மை. பாரதியை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். மகாகவி பாரதியே என உலகுக்கு உணர்த்துவோம்.

வாழ்க பாரதியின் புகழ்!

From around the web