‘மசூதிக்குள் நுழைந்து வேட்டையாடுவோம்’.. சர்ச்சை கிளப்பிய பாஜக எம்எல்ஏ!

 
நித்தேஷ் ரானே

மசூதிக்குள் நுழைந்து வேட்டையாடுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மத குரு மஹந்த் ராம்கிரி மகாராஜ் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து கடந்த ஆண்டு தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “மஹந்த் ராமகிரி மகாராஜுக்கு ஏதாவது நேர்ந்தால், நாங்கள் உங்கள் மசூதிக்குள் நுழைந்து அனைவரையும் வேட்டையாடுவோம்” என்றார்.

Loading tweet...



இதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தார். இதைக்கேட்டு பொதுக்கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை ஆரவாரம் செய்தனர். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நிதீஷ் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா ​​கூறுகையில், அரசியல்வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தார்.

 

இதற்கிடையில் நிதிஷ் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக இவர்கள் மீது இதுபோன்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web