போர் தொடுப்போம்... பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் மீது நேரடி போரைத் தொடுப்போம் என பாகிஸ்தான் அரசு திறந்தவெளியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட ஆயுத மோதலால் பதற்றம் நிலவியது. இதையடுத்து, கட்டார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தம் செய்து, இரு தரப்பும் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டியதால், கடந்த 19ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், இந்நிலைக்கு பின்னரும் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் நீடித்து வருகிறது. இதனை சமரசப்படுத்தும் நோக்கில், இரண்டாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கியது. எனினும் அதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படாததாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தான் மீது திறந்தவெளிப் போரைத் தொடங்குவதற்குத் தயங்கமாட்டோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும், “எங்கள் எல்லையை மீறி தாக்குதல் நடத்தும் எந்த நாட்டையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அமைதியை விரும்புகிறோம், ஆனால் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்,” என தெரிவித்தார்.
இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பதற்றமாக்கி, தென் ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் போர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
