பார்ட்டி கொண்டாடலாம்... மது ஊற்றி கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்... நண்பரை அழைத்து விருந்தாக்கிய கொடூரம்!

 
பாலியல் துன்புறுத்தல்

திருநெல்வேலி அருகே மது ஊற்றிக் கொடுத்து, புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக ரயில்வே கார்டு, அரசு பேருந்து ஓட்டுநர் ஆகியோரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (37).  இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரயில்வே கார்டாக பணியாற்றி வரும் சுபாஷூக்கு, ரயில் பணியில் கேரள மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்த போது புதுச்சேரியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

அந்த இளம்பெண் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பார்மசிஸ்டாக வேலை செய்து வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் பங்கேற்பதை அந்த இளம்பெண் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் ரயிலில் வந்து செல்லும் போது சுபாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி அவருடன் பேசி பழகி வந்த நிலையில் அவருக்கு பல்வேறு உதவிகளையும் சுபாஷ் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுபாஷ், தனது குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு வரவழைத்து உள்ளார். அதன் பின்னர் நெல்லையில் உள்ள பிரபல தனியார் பாரில் இருவரும் மதுகுடித்து பார்ட்டி கொண்டாடி உள்ளனர். போதை ஏறியதும் இளம்பெண் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அவரை சுபாஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவரது நண்பரான ரஸ்தா பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் முருகேசன் (37) என்பவரையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் சுபாஷ் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. போதை தெளிந்த இளம்பெண், சுபாஷ் மற்றும் முருகேசன் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் மூலம் நெல்லை மாநகர காவல் துறையில் இது குறித்து புகார் செய்தார்.

இளம்பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால் சம்பவ இடத்தை அவரால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வழியில் தச்சநல்லூர் என்ற போர்டை பார்த்தாகக் கூறியுள்ளார்.

கைது

இதையடுத்து போலீசார் தச்சநல்லூர் பகுதியைச் சுற்றிக்காட்டி சென்ற வழியை அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது ஒரு போர்டை பார்த்ததும் இளம்பெண் அந்த வழியாக சென்றதாக சுட்டிக்காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ரயில்வேயில் வேலை செய்வோர் பட்டியலை எடுத்து சுபாஷைப் போலீசார் கைது செய்தனர்.

சுபாஷிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து முருகேசனும் கைது செய்யப்பட்டார். இது குறித்து நெல்லை தாலூகா அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுபாஷ், முருகேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web