’வா பேசலாம்’.. நம்பி சென்ற பெண் மருத்துவர்.. சக மருத்துவர் செய்த கொடூரம்!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஜூனியர் பெண் மருத்துவர் சக மருத்துவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
குவாலியர் நகர போலீஸ் சூப்பிரண்டு அசோக் ஜாடோன் கூறுகையில், ""குவாலியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேர்வுக்காக வந்த 25 வயது ஜூனியர் பெண் டாக்டர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியின் மகளிர் விடுதியில் தங்கினார். விடுமுறை நாள் என்பதால், அங்கு தங்கினார். விடுதியில் அதிக மாணவிகள் இல்லை.
அப்போது, அவருடன் படித்த சக மருத்துவர், அவரை தன்னுடன் பேச வெளியே அழைத்துச் சென்றார். இதை நம்பிய அவர் பெண் மருத்துவரை அதே வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!