விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா!! புலி, சிங்கங்களுக்கு தொற்று உறுதி!!

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா!! புலி, சிங்கங்களுக்கு தொற்று உறுதி!!

உலகம் முழுவதுமே கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக வதைத்து வருகிறது. 1,2,3, 4 என்று பட ரிலீஸ் போல கொரோனா அலை என்று உலக நாடுகள் விவாதித்து வருகின்றன. பல நாடுகளிலும், கொரோனா தடுப்பூசி ஒன்று, இரண்டு என டோஸ்கள் செலுத்திய பிறகும், தற்போது பூஸ்டர் ஊசி என்று மூன்றாவதாக இன்னொரு ஊசி செலுத்த முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா!! புலி, சிங்கங்களுக்கு தொற்று உறுதி!!

இந்நிலையில், உலகின் பல பகுதிகளில் மிருகக்காட்சி சாலைகளில் இருக்கும் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் 6 ஆப்பிரிக்க சிங்கங்கள், மற்றும் மூன்று புலிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சோர்வாக படுத்திருப்பது, இருமல் மற்றும் தும்மலின் அறிகுறிகளை கொண்டிருந்த இந்த விலங்குகளை பரிசோதனை செய்த பின்பு, அவற்றிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா!! புலி, சிங்கங்களுக்கு தொற்று உறுதி!!

மிருக காட்சிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்படாத நிலையில், எப்படி விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மிருகங்களின் பராமரிப்பாளரின் அஜாக்கிரதையினால் அவரிடமிருந்து இவற்றிற்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

From around the web