செம தில்லு!! ஒற்றை ஆளாய் 10 சிங்கங்களை தூக்கியெறிந்த காட்டெருமை!! வைரல் வீடியோ!

 
செம தில்லு!! ஒற்றை ஆளாய் 10 சிங்கங்களை தூக்கியெறிந்த காட்டெருமை!! வைரல் வீடியோ!


சிங்கங்கள் தான் கூட்டமாக வரும்… காட்டெருமை ஒற்றை ஆளாய் வந்து அதகளப்படுத்தும் என்று ரஜினியின் ஹிட் பஞ்ச் டயலாக்கை மாற்றியமைத்திருக்கிறது ஒரு காட்டெருமை. சுற்றிலும் 10 சிங்கங்கள். அநாயசியமாக ரஜினி ஸ்டைலில் பந்தாடுகிறது காட்டெருமை. செம டைமிங். ஆக்ரோஷமாக அது பாய்ந்த வருவதைக் கண்டு சுற்றிலும் இருக்கும் சிங்கங்கள் பம்முகின்றன. ஆபத்தில் இருக்கும் தனது நண்பனையோ, உறவையோ காப்பாற்ற துள்ளி குதித்து ஓடி வரும் உத்வேகம்… வரும் போதே நான்கைந்து சிங்கங்களுக்கு உயிர் பயத்தைக் காட்டிய ஆக்ரோஷம் என உலகம் முழுவதுமே இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தாவும் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். கூடவே கலீல் ஜிப்ரானின் நட்பு பற்றிய பொன்மொழியையும் மிக பொருத்தமாய் இணைத்திருக்கிறார்.


அதில் பத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் சேர்ந்து ஒரு காட்டெருமையை கடித்து தின்ன முயற்சி செய்கின்றன. அந்த காட்டெருமை சிங்கங்களிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் அவைகளிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

செம தில்லு!! ஒற்றை ஆளாய் 10 சிங்கங்களை தூக்கியெறிந்த காட்டெருமை!! வைரல் வீடியோ!


சிறிது நேரம் கழித்து அதனுடைய சக நண்பரான மற்றொரு காட்டெருமை இதனை தூரத்தில் இருந்து பார்க்கிறது. வேகமாக ஓடி வந்து அத்தனை சிங்கங்களையும் முட்டி துரத்துகிறது. அவைகளை மோதி தூக்கி எரிகிறது. பயத்தில் சிங்கங்கள் திசைக்கு ஒன்றாக ஓடுகின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது

From around the web