லிப்-லாக்... பாப் பாடகியுடன் அரைக்குறை ஆடையில் கனடாவின் முன்னாள் பிரதமர்!

 
கனடா

பிரபல பாப் இசைப் பாடகி கேட்டி பெர்ரியுடன் அரைகுறை ஆடைகளில் லிப்-லாக் கொடுத்து சிக்கியிருக்கிறார் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ஜோடியைப் பாராட்டியும் கமெண்ட்கள் பறக்கின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா பகுதியில், படகு ஒன்றில் இருவரும் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

Loading tweet...


புகைப்படங்களில், பெர்ரி கருப்பு நிற நீச்சலுக்கூடிய உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் படகில் இணைந்து இருக்கின்றனர். குறிப்பாக, ட்ரூடோ பெர்ரியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி காணப்படுகின்றது. இந்த நேரலைக் காட்சியை படகில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்திய பின்னர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கடந்த காலம் வந்த கிசுகிச்சுகள் உண்மையாகும் என்று உறுதி செய்யப்படுகிறது.

கேட்டி பெர்ரி முன்னதாக நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்தும் வாழ்ந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றிருந்தது; ஆனால் சில காரணங்களால் ஜூன் 2025-ல் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கனடா

மேலும், கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாண்ட்ரீலில் உள்ள பிரபல உணவகத்தில் இருவரும் இரவு உணவு சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே, அவர்கள் தற்போது டேட்டிங் செய்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளதை குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?