ரூ.99 க்கு மது பாட்டில் விற்பனை.. திடீரென பின்வாங்கிய அரசு.. ஏமாற்றத்தில் குடிமகன்கள்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். அதன்படி புதிய மதுபானக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 736 சில்லறை மதுபானக் கடைகள் உள்ளது. இந்தக் கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. லாட்டரி மூலம் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மதுபானக் கொள்கையின்படி ரூ.5500 கோடி வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, ஹரியானாவைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் புதிய மதுபானக் கொள்கை தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கை அறிமுகம். கடந்த 1ம் தேதி முதல் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைக்கும் என்றும், அதில் ரூ.99 மற்றும் அதற்கும் குறைவான விலையுள்ள மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது மது பிரியர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இதனையடுத்து, வரும் 12ம் தேதி மதுக்கடைகள் தனியார் மயமாக்கப்படும் என்றும், மதுபாட்டில்கள் ரூ.99க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவலுடன் காத்திருந்த மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மலிவான மதுவிற்கு இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். தனியார் மதுபான விற்பனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
