டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி பட்டியல்!

 
டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி பட்டியல்!


அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி தொடர்கள் அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி பட்டியல்!

ஏற்கனவே காயம் காரணமாக ஐபிஎல் டி20 தொடரில் இருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் முக்கிய இடம் பெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் தொடர்ந்து வரும் கொரோனா காரணமாக அணி வீரர்கள், உதவி அலுவலர்கள் என 30 பேர் வரை இருந்த அணியில் 15 பேர் வரை மட்டுமே அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி பட்டியல்!

இதுவரை நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளன. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை 23 வீரர்கள் வரை அறிவிக்கப்படுவார்கள் என கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மும்பையில் தேர்வுக் குழுத் தலைவர் தலைமையில் கூடும் கூட்டத்தில் உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இந்தக் கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி பட்டியல்!


ரிசர்வ் வீரர்கள் உள்பட உத்தேச இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், யஜுவேந்திர சஹல், தீபக் சஹர், ஷிகர் தவண், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், சேத்தன் சக்காரியா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, குர்னல் பாண்டியா, பிரித்வி ஷா.

From around the web