டி20 யில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ !!

 
டி20 யில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ !!

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி தேர்வு குறித்தும், வீரர்களின் ஆட்டத்திறன் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டி20 யில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ !!

இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது நவம்பர் 17 முதல் நவ.21 வரை இந்த போட்டிகள் நடத்தப்படும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 யில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ !!

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

From around the web