சிறையில் சொகுசு வாழ்க்கை.. வேறு சிறைக்கு மாற்றப்பட்டார் நடிகர் தர்ஷன்!
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலிக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதற்காக ரசிகர் ரேணுகா சாமியை கடத்தி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும், சிறைக்குள் தர்ஷன் புகைபிடிக்கும் படமும், அவர் தனது நண்பர்களுடன் வீடியோ அழைப்பில் அமர்ந்திருக்கும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் சிறை காவலர்கள் உள்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சொகுசு வசதிகள் வழங்குவது குறித்து விசாரிக்க 3 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற 24வது கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகஸ்ட் 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நடிகர் தர்ஷன் இன்று அதிகாலை 4 மணிக்கு வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!