எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த விவகாரம்.. உயர் ரத்த அழுத்தம் காரணமாக பள்ளி முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறையில் தவறி விழுந்த எல்கேஜி மாணவி உயிரிழந்தார். இது குறித்து அவரது பெற்றோர் பழனிவேல் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து, இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர். புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீஸார் சந்தேக மரணம், பணியில் அலட்சியம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக் மேரி, வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர். அதன்பின், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மூவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக் மேரி. வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், உயர் இரத்த அழுத்தம் காரணமாக தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக் மேரி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் மட்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இன்று காலை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தை செப்டிக் டேங்கில் இருந்து தண்ணீரில் மூழ்கியதும், நுரையீரலில் திரவம் கலந்திருப்பதும் தெரியவந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!