கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்... இன்று 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று டிசம்பர் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்தத் தேர்தல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நடக்கிறது.

வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கேரள அரசு சார்பில் அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்களிக்கச் சென்றவுடன் வேலைக்குத் திரும்பலாம் அல்லது வேலை முடிந்தபின் வாக்களிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
