திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... அக்டோபர் 27ம் தேதி விடுமுறை.... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
திருச்செந்தூர் தூத்துக்குடி சூரசம்ஹாரம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சூரசம்ஹாரம் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த நாளை விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். ஆனால் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்கள் விடுமுறைக்குள் வரமாட்டார்கள். விடுமுறையை ஈடுசெய்யும் நாளாக நவம்பர் 8ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

சூரசம்ஹாரத்தின் முக்கிய நிகழ்வு சிறப்பு யாகசாலை பூஜை முடிவடைய பிறகு மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் போது நடைபெறும். திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 26ஆம் தேதி வரை விரத நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 28ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும் எனவும், மாலை 6:30 மணிக்கு தெய்வானை அம்மனுக்கு காட்சி கொடுத்தல் மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை ஊஞ்சல் சேவை நடைபெற்று, நவம்பர் 2ஆம் தேதி விழா ஊஞ்சல் சேவை மற்றும் விடையாற்றியுடன் நிறைவடையும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!