நெகிழ்ச்சி.... திருவண்ணாமலையில் தமிழ் பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம்!

 
அமெரிக்க பெண்கள் புடவையில் புடவை திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சிலர் சாமி தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்திருந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டுப்புடவை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

சாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் ராஜகோபுரம் முன்பு அமர்ந்து 'ஓம் நமசிவாய' என்ற பஜனையில் ஈடுபட்டனர். சிலர் பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கல்தூண்களில் செதுக்கப்பட்டு இருந்த சிற்பங்களைக் கண்டு ஆச்சரியத்துடன் வியந்து பார்வையிட்டனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web