நெகிழ்ச்சி... 4 தலைமுறைகளைக் கடந்தும் ஆரோக்கியமாக வலம் வரும் முதியவர்.. ஊரே சேர்ந்து 100வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ச்சி!

 
ன்கேஆர் காத்த வேளாளர்

அவருக்கு 100 வயசு என்று சொல்லி ஒதுக்கி வைத்து விட முடியாது. 40,45 வயதுகளில் கால் வலி, முதுகு வலி, படியேற முடியலை, தலைச்சுற்றல் என்று காரணங்களைத் தேடி சுருண்டு படுத்துக் கொள்ளும் இந்த தலைமுறையினரை வியக்க வைக்கிறார் என்கேஆர்.

யெஸ்.. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தான் இந்த என்கேஆர் காத்த வேளாளர். அவர் தனது 100 வயதை எட்டியதும், அவரது குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களை அழைத்து பிறந்தநாள் தொடர்பான யாகம் (சதாப்தி மகா பிரத்யுஞ்சை சாந்தி) நடத்தி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். மொத்த ஊரும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். 

100 வயதைக் கடந்த என்.கே.ஆர்.காத்த வேளாளருக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள் என மொத்தம் ஏழு குழந்தைகள் உள்ளனர். 11 பேரக்குழந்தைகள், ஏழு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த முதியவர் நான்கு தலைமுறைகளை பார்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி பெயர் அவதாளம்மாள், பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த முதியவர் சைவ உணவுகளை விரும்பி உண்பாராம். இன்று வரை தனது வேலையைத் தானே கவனித்துக் கொள்கிறார். விறகு அடுப்பில் சொந்தமாக உணவை சமைத்து, வீட்டை சுற்றி கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவார். 100 வயதாகும் இவர் உடல் உபாதைகளுக்கு மருந்து சாப்பிடுவதில்லை.  அவரது பிறந்தநாள் விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆசி பெற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web