சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்... 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று (டிசம்பர் 9) மூலவருக்கு மகா அலங்காரம் செய்யப்பட்டுத் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இக்கோவிலுக்குத் தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வீடு, மனை, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட வேண்டிய வரங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று விடியற்காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு மகா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
