லாட்டரி மார்ட்டின் மகன் விஜய்யுடன் சந்திப்பு?! தவெகவுடன் கூட்டணி!

 
சார்லஸ்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தவெக தலைவர் விஜய்யை இன்று லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மார்ட்டின் சார்லஸ்

இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக விஜய், தனது பனையூர் வீட்டில் இருந்து காலை 8 மணிக்குக் கார் மூலம் புதுவை நோக்கிப் புறப்படுகிறார். ஹெலிபேடு மைதானத்தில் அவர் தனது வழக்கமான பிரச்சார வாகனத்தில் நின்றபடியே பேச உள்ளார்.

இந்நிலையில் இன்று லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் விஜய்யைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தவெகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ட்டின்

ஏற்கெனவே லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா விஜய்யுடன் இருக்கும் நிலையில் தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டினின்  மகனும் விஜய்யுடன் இணைவது அரசியல் விமர்சகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் செலவுகளுக்கு அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் லாட்டரி அதிபர் நன்கொடையாக கோடிகளில் கொடுத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!