சிறைக்குள் மலர்ந்த காதல்.. ஒரு காதலனுக்காக மோதிக்கொண்ட இரு காதலிகள்.. அதிர்ந்த புழல் சிறை!
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் நைஜீரியாவை சேர்ந்த 2 பெண் கைதிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
அவர்கள் பெயர் மோனிகா (31), கிளாரா (32).. இவர்கள் இருவரும் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு இங்கு விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அதே கடத்தல் வழக்கில் நைஜீரிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் ஆண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நைஜீரிய இளைஞனை மோனிகா மற்றும் கிளார்கோ இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.. நேற்று மாலை வழக்கம் போல் பார்வையாளர்கள் சந்திப்பு நேரம் வந்தது. அப்போது கிளார்கோ, சிறைத்துறையின் அனுமதியுடன் விசாரணை பிரிவில் நைஜீரிய ஆண் காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார்.. அவரிடம் பேசிவிட்டு மீண்டும் தனது சிறை அறைக்கு சென்றார் கிளார்கோ..
அதே அறையில் இருந்த மோனிகா, என் காதலனிடம் நீ எப்படி பேச முடியும்? அதைக் கேட்டு கிளாராக்கோவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர்களின் தகராறு வாக்குவாதமாக மாறி சண்டையில் முடிந்தது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மோனிகா கிளாராக்கோவின் உதட்டை கடித்து விட்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிறை காவலர்கள் விரைந்து வந்து கிளார்கோவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிகாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் நண்பருக்காக இரு பெண்களுக்கு இடையே நடந்த சண்டையில் நைஜீரியாவை சேர்ந்த மற்றொரு பெண் சக கைதியின் உதட்டை கடித்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!