பிசியோதெரபியுடன் கள்ளக்காதல்.. மிளகாய் பொடி தூவி மருத்துவரை கொடூரமாக கொன்ற தந்தை..!!

 
மருத்துவர் கொலை

தனது மகளுடன் கொண்ட கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மருத்துவரை மகளின் தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

Guntur Jn Railway Station (GNT) : Station Code, Time Table, Map, Enquiry

இந்நிலையில் அதே மருத்துவமனையில்  வேலை செய்த பெண் மருத்துவருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதுகுறித்து மருத்துவரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் மருத்துவர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து சீதாராமாஞ்சேயலுடன் தங்கி வாழ்ந்து வந்தார்.

வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சினிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சினிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார். இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசீனார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.

A married man's love affair with his daughter.. Father who did not like  him.. Killed with

இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

From around the web