மைத்துனியுடன் காதல்; இளைஞர் அடித்துக் கொலை... காதலி கழுத்தறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி!

 
காதல் கொலை

உத்தரபிரதேசம் ஹமீர்பூர் மாவட்டம் மௌதா பகுதியில் உள்ள பார்ச் கிராமத்தில் கௌரவக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ரவி ஸ்ரீவாஸ் என்ற இளைஞர், தனது மைத்துனியான 18 வயது இளம்பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார். நேற்று மதியம் ரவி, அந்த பெண்ணை சந்திக்க அவள் கிராமத்திற்குச் சென்றார். அப்போது பெண்ணின் மாமனார் பின்டூ அங்கு வந்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பின்டூ ரவியை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து கயிற்றால் கட்டி குச்சியால் அடித்து கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர்கள், அவர் விஷம் குடித்ததாக பொய்யாக கூறினர். ஆனால் மருத்துவர்கள் உடலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சுவடுகளை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

காதல் கொலை

இதையடுத்து ரவியின் தந்தை உமாசங்கர் (காளிதீன்) பெண்ணின் குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேருக்கு எதிராக புகார் அளித்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹமீர்பூர் மாவட்ட எஸ்.பி. தீக்ஷா ஷர்மா தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், காதலன் உயிரிழந்தது தெரியவந்ததும் அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனடியாக அருகிலுள்ள மௌதா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

போலீசார் தெரிவித்ததாவது: “முதற்கட்ட விசாரணையில் ரவி வீட்டு உள்ளே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர் பேசக்கூடிய நிலையில் வந்ததும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்” என தெரிவித்தனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இதற்கு முன்பும் ரவி அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பெண்ணின் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் இருவரும் ஓடி சென்றதாகவும், பின்னர் போலீசார் அவர்களை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

பெண்ணின் குடும்பத்தினர், வருகிற நவம்பர் 2ம் தேதி ஜாலவுன் மாவட்டம் கடௌரா பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும், இதை எதிர்த்து ரவி மீண்டும் அவளை ஓடிச் செல்ல அழைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் பெண்ணின் பாட்டி கல்லி கூறியதாவது: “என் பேத்தி ரவியுடன் உறவை முடித்துவிட்டாள். அவர் துப்பாக்கி, கத்தி கொண்டு வந்து எங்களைத் தாக்கினார். அதற்காகவே தற்காப்பாக நடந்தது” என விளக்கம் அளித்தார். இந்த சம்பவம், கௌரவக் கொலைகள் மீண்டும் மாநிலத்தில் தலைதூக்கியுள்ளதாக சமூக வட்டாரங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?