லவ் யூ ... நடிகர் ரஜினிகாந்த் கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து!

துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸிங் போட்டியில் 992 போர்ஷே பிரிவில் நடிகர் அஜீத்குமார் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த ரேஸில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி 23வது இடத்தை பிடித்துள்ளார்.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
தனது அணி வெற்றி பெற்றதும் தேசிய கொடியுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார் நடிகர் அஜித் குமார். இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் 3 வது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய சாதனையே. அதுவும் அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “ வாழ்த்துக்கள் எனது அன்பே...நீங்கள் இதை செய்துவிட்டீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். லவ் யூ “ என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!