நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்... ரோட்டில் நின்றிருந்தவர்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!

 
கார் விபத்து

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே நடுரோட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தாறுமாறாக தறிகெட்டு ஒடிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த 3 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீணனூர் அம்பேத்கர் நகர் கிராமத்தில் பேருந்திற்காக பயணிகள் பேருந்து நிறுத்தம் முன்பு காத்திருந்தனர். அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து, சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கருப்பு கலர் சொகுசு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் அலைபாய்ந்தபடியே தாறுமாறாக சென்றுள்ளது.

அப்போது பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதி விடுவதைத் தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் வேகமாக காரை வளைக்கவே, எதிர்ப்புறம் சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த 2 பெண், 1 ஆண் உட்பட 3 பேர் மீதும் மோதியது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரில், கீணனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த  செந்தில்குமார் (39) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த  செல்வி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்தில சிக்கிய சிலம்பரசி (21) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, காரில் இருந்தவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web