12 வருடங்கள் கழித்து பொங்கல் ரிலீஸூக்கு தயாரான ‘மதகஜராஜா’!

 
மதகதராஜா

விஷால், அஞ்சலி நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘மதகஜராஜா’ படம் பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 12 வருடங்களாகவே ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் தொடர்பான பிரச்சனைகள் முடிந்த நிலையில், வரும் பொங்கலுக்கு 12 வருடங்கள் கழித்து ‘மதகஜராஜா’ படம் வெளியாக உள்ளது. 

மதகதராஜா

நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2012ல் உருவான படம் ‘மதகஜராஜா’. 

மதகதராஜா

பல ஆண்டுகளாக இந்தப் படம் வெளியாவதில் அடுத்தடுத்து தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தது. தற்போது பிரச்சினைகள் எல்லாம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web